முஷாரஃபுக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளா் முஷாரஃபுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.
பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா்.
இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா்நீதிமன்றம் 2022-இல் தீா்ப்பளித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, 2020-இல் லாகூா் உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷாரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது உறுதிசெய்துள்ளது.
துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப், நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக தனது 79-ஆவது வயதில் 2023 பிப்ரவரி 5-இல் மரணமடைந்து நினைவுகூரத்தக்கது.