;
Athirady Tamil News

பிரதமர் ரிஷி சுனக்கின் முடிவை பாராட்டிய இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி: விரிவான பின்னணி

0

முறைகேடு வழக்கில் சிக்கிய ஒவ்வொரு தபால் அலுவலக அதிகாரிகளின் தண்டனையையும் ரத்து செய்யும் ரிஷி சுனக்கின் முடிவை இளவரசி கேட்டின் அஞ்சலக அதிகாரி பாராட்டியுள்ளார்.

சுமார் 900 அஞ்சலக அதிகாரிகள்
அத்துடன், இந்த மொத்த சிக்கலுக்கும் காரணமானவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் ரிஷி சுனக் எடுத்துள்ள நடவடிக்கையால் சுமார் 900 அஞ்சலக அதிகாரிகள் மீதான வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்பதுடன், இந்த வழக்குகளில் சிக்கியுள்ளவர்களுக்கு ஆறு இலக்க இழப்பீடும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது இந்த விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், நமது தேசத்தின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய அநீதிகளில் ஒன்று இந்த அஞ்சலக முறைகேடு வழக்கு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்ய கடினமாக உழைத்த மக்கள் தங்கள் சொந்தத் தவறின்றி தங்கள் வாழ்க்கையையும், அவர்களின் நற்பெயரையும் அழித்துவிட்டனர் எனவும் ரிஷி சுனக் பதிவு செய்துள்ளார்.

அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இழப்பீடும் அளிக்கப்பட வேண்டும் என்றார். பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள 63 வயதான இந்திய வம்சாவளி ஹஸ்முக் ஷிங்காதியா, இது உண்மையில் பாராட்டுதலுக்குரிய செய்தி என்றார்.

இழப்பீட்டு அளிக்கப்பட வேண்டும்
இந்த தருணத்திற்காக போஸ்ட் மாஸ்டர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய நிம்மதியை அளிப்பதாக இருக்கும் என்றார். இளவரசி கேட் மிடில்டனின் உள்ளூர் அஞ்சலக அதிகாரியாக செயல்பட்ட ஹஸ்முக் ஷிங்காதியா, தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய தமக்கு பத்து வருடங்கள் ஆனது என்றும், ஆனால் சிலர் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகள் ரத்தான நிலையில், ஒப்புக்கொண்டது போன்று இனி இழப்பீட்டு அளிக்கப்பட வேண்டும் என்றார். Upper Bucklebury பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் ஹஸ்முக். தொடர்புடைய கடையில் தான் கேட் மற்றும் வில்லியம் அடிக்கடி விஜயம் செய்துள்ளனர்.

இவர் நடத்தி வந்த அஞ்சலகத்தில் இருந்து 2011ல் 16,000 பவுண்டுகள் திருடிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படியானவர் அல்ல என இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பியதுடன், தொடர்ந்து அவரது கடைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அத்துடன் 2011ல் கேட் மற்றும் வில்லியம் திருமணத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். 2021ல் தான் ஹஸ்முக் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.