Ayodhya Temple: 7,000 கிலோ எடையில் ‘ராம் அல்வா’ தயாரிக்கிறார் கின்னஸ் சாதனை சமையல் கலைஞர்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 7 ஆயிரம் கிலோ எடையில் பிரமாண்டமான ‘ராம் அல்வா’ வை பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்க உள்ளார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராம் அல்வா
அந்த வகையில், அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்துக்கு 7 ஆயிரம் கிலோ எடையில் பிரமாண்டமான ‘ராம் அல்வா’ வை பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்க உள்ளார்.
இந்த அல்வாவில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை சேர்க்கப்படவுள்ளது.
மேலும், இந்த அல்வாவை செய்வதற்காக 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாய் பயன்படுத்தப்படும். எக்கு மற்றும் இரும்பால் கொண்டு செய்யப்பட்ட இந்த கடாயை தூக்குவதற்கு கிரேன் பயன்படுத்தப்படும். மேலும் அல்வாவை கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ ஆகும்.
இங்கு தயாரிக்கப்படும் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்கும் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் பல முறை கின்னஸில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.