;
Athirady Tamil News

பொங்கல் பண்டிகை: கோவை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஜன.16, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவையில் இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06086) மறுநாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜன.17, 18 தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06085) மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும்.

பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜன.12) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06577) இரவு 11.30 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து சனிக்கிழமை (ஜன.13) அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06578) பகல் 12 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது.

யஷ்வந்த்பூா்-கொச்சுவேலி: பெங்களூரை அடுத்த யஷ்வந்த்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06235) மறுநாள் இரவு 7.10 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06236) மறுநாள் மாலை 4.30 மணிக்கு யஷ்வந்த்பூா் சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூரு, பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், கொல்லம் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜன.12) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.