சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம்
கோவா மாநிலத்தில் தனது 4 வயது மகனைக் கொலை செய்த பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்தை அழைத்துச் சென்ற காரின் சாரதி, அந்தப் பெண்னுடனான தனது 12 மணித்தியால பயணம் பற்றிய அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசிய சாரதியான ரேஜான் டிசோசா,
கடந்த 07-01-2024ம் திகதி, வடக்கு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறிய டிசோசா, “அவசரமாக ஒரு பெண்ணை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று” தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
தான் உள்ளிட்ட இரு சாரதிகள் உடனடியாக நள்ளிரவு 12.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தோம், நள்ளிரவு 1 மணிக்கு காரில் ஏறிய சுசனா, பையை எடுத்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
“நான் வரவேற்பறையில் இருந்து பையை எடுத்தேன். அது ஒரு கருப்பு நிற பை மற்றும் மிகவும் கனமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் சந்தேகிக்கவில்லை,” என்று டிசோசா குறிப்பிட்டுள்ளார்.
“ஏன் பை இவ்வளவு கனமாக இருக்கிறது, அதில் மதுபான பொத்தல்கள் இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன், ஆம், மது பாட்டில்கள் இருக்கின்ற” என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயணம் முழுவதும் சுச்சனா சேத் மிகவும் அமைதியாக இருந்ததாகவும், தண்ணீர் பாட்டிலுக்காக ஒரு இடத்தில் மட்டுமே நின்றதாகவும் சாரதி குறிப்பிட்டிருந்தார்.
கோவா – கர்நாடகா எல்லையில் நீண்ட நேர்சாலை நெரிச்சல் எதிர்கொண்டபோதும், சுகனா சேத் பொறுமையின்மை அல்லது பீதியின் அறிகுறிகளைக் காட்டவில்லை.
“நான் வாகன நெரிசல் சரியாக 5-6 மணி நேரம் ஆகும் என்று சொன்னேன். மீளவும் விமான நிலையத்தில் இறக்கிவிடுவதாகவும் கூறினேன். எனினும், அவர் இதனை மறுத்துவிட்டார், நெரிசல் குறைந்தப் பின்னர் போகலாம் என்று சுசனா கூறினார்.
“அப்போது தான் நான் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தேன். ஏனென்றால் அவர் வேகமாக செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மறுபுறம், போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும் அவர் பீதியடையவில்லை.
” கர்நாடகா எல்லையைத் தாண்டியபோது, அந்தப் பெண்ணுடன் குழந்தை இருக்கிறதா என்று கோவா பொலிஸில் இருந்து தனக்கு அழைப்பு வந்தது என்று டிசோசா கூறினார்.
காரணம் கேட்டபோது, அந்த பெண்ணின் அறையில் இரத்தக்கறை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இப்போது ஏதோ தவறு இருப்பதாக நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன்.” காரை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு கூறினர்.
“நான் கூகுள் மேப்பை பார்த்தேன், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் பின்னால் இருப்பதை அறிந்துகொண்டேன். நான் யு-டர்ன் எடுத்திருந்தால், அந்தப் பெண் பயந்திருக்கலாம், அதனால் நான் அதைச் செய்யவில்லை” என்று டிசோசா கூறினார்.
கர்நாடகாவில் உள்ள பலகைகள் உள்ளூர் மொழியில் இருப்பதால், திசைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று டிசோசா கூறினார்.
அவர் ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி, அருகிலுள்ள பொலிஸ் நிலையம் எங்கே என்று விசாரித்தேன். பின்னர் காரை பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றேன்.
பொலிஸ் நிலையம் வந்ததும் என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என அந்தப் பெண் கேட்டார். எனக்கு பொலிஸாரிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.
பொலிஸாரின் சொன்னபடியே செய்தேன்” என்று சாரதி அந்தப் பெண்ணிடம் கூறியதாக குறிப்பிட்டார்.
தனது காரை பொலிஸாரிடம் ஒப்படைத்தார், அவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது, பைக்குள் குழந்தையின் சடலம் இருப்பதைக் கண்டனர். “அந்தப் பெண் பயணம் முழுவதும் அமைதியாக இருந்தார், எந்த பதட்டமும் காட்டவில்லை.
“உடல் மீட்கப்பட்ட போதும், அவர் சாதாரணமாக இருந்தார்,” என்று சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.