இஸ்ரோவின் சம்பளம் இதுதான் – கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!
இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோ சோம்நாத்
மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி சார்பில் டெக்ஃபெஸ்ட் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அதில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கலந்து கொண்டார்.
அப்போது ஐஐடி மாணவர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஐஐடி மாணவர்கள் பங்களிக்க வேண்டும். இஸ்ரோ தனது திட்டங்களுக்காக நாடு முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
ஐஐடி மாணவர்கள்
குறிப்பாக மெடிரியல் சயின்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் மும்பை ஐஐடி தனது நிபுணத்துவத்தை தங்களுக்கு வழங்கலாம். தனது குழு ஒரு சமயம் இஸ்ரோவுக்கு காலியிடங்களை நிரப்ப ஐஐடி கல்லூரி சென்றது. அங்கே இஸ்ரோவில் கிடைக்கும் ஊதியம் குறித்துக் கேட்ட தெரிந்தவுடன் 60% மாணவர்கள் வெளியேறிவிட்டனர்.
மாணவர்கள் நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் சர்வதேச வேலைகளுக்கு மட்டும் முன்னுரிமை தருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அவை புவி நுண்ணறிவு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்பு ஆகியவை தொடர்பாக இருக்கும்.
ராக்கெட்கள் பெரிதாகிக் கொண்டே இருக்கும் நிலையில், பெரிய ஏவுதளங்கள் தேவைப்படும் என்றும் தற்போதைய ஸ்ரீஹரிகோட்டா இந்த ராக்கெட்களுக்கு போதுமானதாக இருக்காது என பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.