வெளிநாட்டு பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம்
5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறு பிள்ளைகளை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு விட்டு செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முறைப்பாடுகள்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் ஆஜராகும்போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.