ஹவுதி கிளர்ச்சியாளர்களை தடுக்க இணைந்த பிரபல நாடுகள்: எச்சரிக்கை விடுத்துள்ள பைடன்
பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன.
பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குல்களினால் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய வர்த்தக கப்பல்கள் சென்றடைய தாமதமானது.
வணிக பாதையின் சுதந்திரம்
இதன் காரணமாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளங்கள் மீது நேற்றிரவு அதிரடி வான்வழித் தாக்குதலை இணைந்து நடத்தியுள்ளது.
தாக்குதல் தொடர்பில் அமெரிக்க அதிபர் கூறுகையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தங்கள் பணியாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற தகவலை இந்த தாக்குதலின் மூலம் காட்டியுள்ளோம்.
மேலும், உலகின் மிக முக்கியமான வணிக பாதையின் சுதந்திரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறும் போது, ஹவுதி படையினரின் தாக்குதலை அனுமதிக்க முடியாது, பிரித்தானியா எப்போது சுகந்திரமான வர்த்தக பாதைக்கு ஆதரவாக நிற்கும், எனவே தற்காப்புக்காக வரையறுக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பிரித்தானியாவும் இணைந்து போர் கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றின் உதவியோடு ஏமன் தலைநகர் Sanaa Hodieda, Saada, மற்றும் Dhamar ஆகிய பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன், குறித்த தாக்குதலில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 6 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.