700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இதுவரை 700-க்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அனைத்து ஏவுகணைத் தளங்களும் ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து இஸ்ரேல் மக்களைப் பாதுக்காக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவில் சோதனைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அழித்துள்ளது. இன்னும் தொடர்ச்சியான சோதனைகளை செய்துவருவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் கோலானி பிரிவு, காஸாவில் உள்ள இடுகாடு ஒன்றிற்குள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளைத் தகர்த்ததாகத் தெரிவித்துள்ளது.
இடுகாட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஏவுகனைகள் இஸ்ரேலைக் குறிவைத்து நின்றது குறிப்பிடத்தக்கது.
காஸாவின் பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு பின்னாலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏவுகணைத் தளங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.