மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் சொன்ன பதில்!
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை தொடர்பான கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறைமுக பதிலளித்துள்ளார்.
சலுகை
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலால், நாடுமுழுவதும் 3 மாதங்கள் ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.
இதனால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க அந்த சலுகையை ரயில்வே ரத்து செய்தது. தற்போது வரை மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை.
வழங்கப்படுமா?
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ‘மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் “”இந்திய ரயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரயில் பயணிக்கும் ரயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.
சேரும் இடத்துக்கான ரயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது” என்றார்.