வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
பதுளை – தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் பண மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹல்துமுல்ல பகுதிக்கு பயணித்த பேருந்தொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மேலும், கைதான சந்தேக நபர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் கூறியுள்ளனர்.