;
Athirady Tamil News

வற் வரிக்கு மேலதிகமாக 16 வகையான வரிகளை அறவிடும் இறைவரித் திணைக்களம்

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரிக்கு மேலதிகமாக 16 வகையான வரிகளை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வற் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வரி முறை இலகுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சில துறைகள் பல தடவைகள் வற் வரிக்கு உட்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, அந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் ஏனைய விசேட வரிகள் தொடர்ந்தும் அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வற் வரி
கடந்த மாதம் இரண்டரை சதவீதம் வசூலிக்கப்பட வேண்டிய தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் 5 சதவீதத்தை தனியார் மின்சார நிறுவனம் வசூலித்துள்ளதாக மின்சார நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விற்பனை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி, சமூக பாதுகாப்பு வரி, கட்டுமான வரி, சுங்க வரி, முத்திரை வரி, தொலைத்தொடர்பு வரி, என பல வகையான வரிகள் வற் வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வற் வரியை அமுல்படுத்துவதுடன் எவ்வாறான வரிகளை நீக்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், வற் வரியை விதிப்பதற்கு இருந்த அவசரம் நீக்குவதற்கு அவசரம் இல்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.