15 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் : கடன் வழங்கும் பணி விரைவில்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 15,000 பேருக்கு புதிய வீட்டுக்கடன் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
வீடுகளை புனரமைக்கும் பணிகளுக்காக இந்த வீட்டுக்கடன் வழங்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கடன்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முதல் வேலைத்திட்டமாக “அனைவருக்கும் வீடு” வீடமைப்பு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.