;
Athirady Tamil News

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (14) சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சட்டவிரோத மீன்பிடி
வெளிநாட்டு மீன்பிடி இழுவைப் படகுகள் மூலம் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

உள்ளூர் கடற்தொழிலார்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளங்களின் விளைவுகளை கருத்தில் கொண்டே இந்த ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலதிக சட்ட நடவடிக்கை
அந்தவகையில், நேற்றைய தினம் (14) இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் 10 இந்திய கடற்தொழிலார்களுடன் 01 இந்திய இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலார்கள் (10) மற்றும் மீன்பிடி படகு (01) என்பன காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.