முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்
இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடுவை விதித்தார் மாலைதீவு அதிபர் முகமது மூயிஸ்.
இதன்படி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் இந்திய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
88 இந்திய இராணுவ வீரா்கள்
மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகொப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது.
அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய இராணுவ வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்
இந்த நிலையில், மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரா்களை மாா்ச் 15 ஆம் திகதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலைதீவில் இருந்து உடனடியாக இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என மூயிஸ் தெரிவித்துள்ளார்.