தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு: தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து!
அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பற்றி எரிந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து முற்றாக தீப்பிடித்து எரிந்ததுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பெலியத்த நுழைவாயிலில் இருந்து சகல நுழைவாயில் வரையான நெடுஞ்சாலைப் பகுதி மூடப்பட்டுள்ளதுடன், சகல நுழைவாயிலில் இருந்து வெளிவரும் வாகனங்கள் மீண்டும் பெலியத்த நுழைவாயிலில் நுழையும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.