“தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்” ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளி
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது தொடர்ந்து வரும் நிலையில் ஹமாஸ் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அப்போது நோவா ( Noa Argamani, 26) என்ற இஸ்ரேலிய இளம்பெண்ணை ஹமாஸ் குழுவினரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளியாகியுள்ள காணொளி
கடத்தி செல்லப்படும் போது அந்த இஸ்ரேலிய இளம்பெண், “என்னைக் கொன்றுவிடாதீர்கள் என கதறிய காட்சி” கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது.
அதன் பின்னர் அந்த பெண் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், ஹமாஸ், தற்போது வெளியிட்டுள்ள காணொளியில் நோவா( Noa Argamani, 26), யோசி ஷராபி(Yossi Sharabi 53) மற்றும் Itai Svirsky இட்டாய் ஸ்விர்ஸ்கி 38) ஆகிய மூவரும், போரை நிறுத்துங்கள், எங்களை மீட்டுச் செல்லுங்கள் என கோரும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய இளம்பெண்
மேலும், காணொளியில் இவர்களுடைய தலைவிதி நாளை முடிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை தன் மகளுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்த நோவா வின் தாயார் லிரோவா ( Liroa) மகள் உயிருடன் இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளியாகியுள்ள காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.