;
Athirady Tamil News

மகிந்த ஆட்சியில் முட்டாள்தனமான செயல்: விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

0

கடந்தாண்டு 800இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

இந்த விமான இரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பல சந்தர்ப்பங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆறு A-350 ரக பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை கொள்வனவு செய்வது இரத்துச் செய்யப்பட்ட போதும் மாற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், விமான நிறுவனத்திடம் இருந்த 24 விமானங்களில் 6 விமானங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பறக்கக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை 18ஆக குறைத்தது.

விமானங்கள் ரத்து
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை மற்றும் தாமதம் குறித்து விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளரிடம் கேட்டபோது, ​​விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உலகில் விமான உதிரி பாகங்களின் பற்றாக்குறை காரணமாக வேறு பல காரணிகள் வாங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இரண்டு குத்தகை முறைகளின் கீழ் மூன்று பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்ததன் மூலம் தாமதங்கள் மற்றும் இரத்துச்செய்தல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தீபால் பெரேரா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.