;
Athirady Tamil News

படகு விபத்து: 8 பேர் பலி, 100 பேர் மாயம்

0

வட மத்திய நைஜீரியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 100 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகில் அதிக எடை ஏற்றப்பட்ட காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

போர்கு மாவட்டத்தில் இருந்து அருகில் உ:ள்ள கெப்பி பகுதிக்குச் சென்ற படகு ஆற்றின் நடுவே மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில அவசர உதவி மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அடூ, “படகில் அதிக எடை இருந்ததால், காற்று பலமாக தாக்கியது- படகைப் பாதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

படகின் கொள்ளளவு என்பது 100 பயணிகளை மட்டுமே ஏற்ற இயலும். அதனை விட அதிகமான பயணிகள் படகில் இருந்ததாகவும் தானிய மூட்டைகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைந்து போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

முறையான நெறிமுறைகள் இல்லாததாலும், சாலை போக்குவரத்து சரியாக இல்லாததாலும் அதிக மக்கள் படகில் செல்ல வேண்டிய சூழலால் படகுகள் விபத்து அடிக்கடி நடைபெறுவதாக தெரிகிறது.

இதுவரை நிகழ்ந்த படகு விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை. எனினும் கடந்த 7 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகுகள் மூழ்கியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.