யாழில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்
யாழ் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 2800 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை கிழமை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் நாளைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது, இதன்போது மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இந்த வேலை திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
குறிப்பாக திருநெல்வேலி, கொக்குவில், யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அதிகளவானோர் கடந்த இரண்டரை மாதங்களுக்குள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 2800 பேருக்கு மேற்பட்டவர்கள் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
இது ஒரு பாரிய பிரச்சினை பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
சுகாதாரத் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த திணைக்களங்கள் அனுசரணையாக இருக்க முடியும் ஆனால் பொதுமக்கள் தங்களுடைய வீட்டுப் பகுதி சுற்று பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.