ஆன்லைன் உணவு ஆர்டரில் இறந்து கிடந்த எலி: 75 மணி நேரம் அவதிக்குள்ளான இளைஞர்!
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் எலி இறந்து கிடந்ததால் ஆடவர் ஒருவர் 75 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவில் இறந்து கிடந்த எலி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த ராஜீவ் சுக்லா என்ற நபர் கடந்த 8ம் திகதி மும்பை வந்துள்ளார். ராஜீவ் சுக்லா அன்றிரவு உணவிற்காக ஆன்லைன் மூலம் உணவகம் ஒன்றில் சைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
ஆனால் சாப்பாட்டில் சுவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ராஜீவ் சுக்லா பார்சலில் வந்த உணவை பரிசோதித்து பார்த்துள்ளார், அப்போது அதில் இறந்த எலி ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா, கிட்டத்தட்ட 75 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ராஜீவ் சுக்லா மும்பை நாக்பாடா காவல் நிலையத்தில் புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா தன்னுடைய X தளத்தில் எலி இறந்து கிடந்த உணவு மற்றும் மருத்துவமனை கட்டண ரசீது ஆகியவற்றை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.
பதிலளித்த உணவகம்
இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட (Barbeque Nation) உணவகம் ராஜீவ் சுக்லாவின் பதிவுக்கு பதிலளித்து பேசியுள்ளது.
I Rajeev shukla (pure vegetarian) from prayagraj visited Mumbai, on 8th Jan’24 night ordered veg meal box from BARBEQUE NATION, worli outlet that a contained dead mouse, hospitalised for 75 plus hours. complaint has not been lodged at nagpada police station yet.
Please help pic.twitter.com/Kup5fTy1Ln— rajeev shukla (@shukraj) January 14, 2024
அதில் வணக்கம் ராஜீவ் சுக்லா, நீங்கள் அடைந்த சிரமத்திற்கு வருந்துகிறோம், மும்பை அலுவலகத்தின் ஊழியர் பரேஷ், உங்களை தீர்வை நோக்கி அழைத்து செல்ல தொடர்பில் இருப்பார். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.