;
Athirady Tamil News

கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

0

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி நடவடிக்கைக்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய மாணவர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியா – கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைவடைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது.

கடந்த 2022 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்கள் 86 சதவீதம் குறைந்துள்ளனர்.

இந்திய மாணவர்களின் வருகை காரணமாக கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இலாபம் ஈட்டியுள்ளதுடன் 16.4 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு வருவாய் வந்த நிலையில், அது தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியா – கனடா இடையேயான உறவில், ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்திய மாணவர்கள் கனடா செல்வது குறைந்துள்ள அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா அரசு சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.