பிரான்ஸ் புதிய பிரதமரின் செயல்: எச்சரிக்கை விடுத்துள்ள வல்லுநர்கள்
பிரான்ஸின் புதிய பிரதமரான கேப்ரியல் அத்தால், நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே உறங்குவதாக தெரியவந்துள்ளது.
இளம் பிரதமரின் உடல் நலத்தினை கண்காணிக்கும் வல்லுநர்கள் பிரதமரின் இந்த செயற்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உறக்கமின்மை
இந்நிலையில், அந்நாட்டில் நிலவும் சீரற்றகாலநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அவர் தொடர்ச்சியாக கடமையாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இரவும் பகலுமாக பல இடங்களுக்கு பயணிப்பதும், சந்திப்புகள் மேற்கொள்வதுமாக காலத்தை கழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய உடல் ஆபத்து
இதனால், பிரதமர் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே உறங்குவதாக கூறப்படுகிறது.
அதேவேளை, போதிய உறக்கமின்மையானது, பாரிய உடல் ஆபத்தினை கொண்டுவரும் என மருத்துவர் Dr. Jonathan Taieb எச்சரித்துள்ளார்.