இஸ்ரேல் வீசியெறிந்த துண்டு பிரசுரங்கள் என்ன சொல்கிறது?
காஸா மீது ஓயாத தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக் கணக்கானோரைக் கொலை செய்த இஸ்ரேல், பிணைக்கைதிகளின் புகைப்படங்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்து வீசியுள்ளது.
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 69 பிணைக்கைதிகளின் புகைப்படங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வானிலிருந்து வீசியுள்ளது.
136 பிணைக்கதிகள் இன்னும் நாடுதிரும்பாத நிலையில், ஏறத்தாள 107 பேர் மட்டுமே உயிரோடிருக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் கருதுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்தப் பிரசுரங்களில் இஸ்ரேல் ராணுவத்தைத் தொடர்பு கொள்வதற்கான எண்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், ‘நீங்கள் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்றால், இந்தப் பிணைக்கைதிகள் பற்றிய தகவல்களை இஸ்ரேல் ராணுவத்திற்கு தெரிவியுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இரக்கமற்ற தொடர் தாக்குதல்களால் இதுவரை 24,927 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது. 62,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.