;
Athirady Tamil News

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் பணிப்புரை
இதற்கான வட்டித்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை இலங்கை மின்சார சபையே செலுத்தி வருகிறது. எனினும் குறித்த தொகையை மின்பட்டியலின் வெவ்வேறு கட்டணப் பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சார சபை அறவிட்டுக்கொள்வதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவல் வெளியில் கசிந்துள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் மீளப் பெறுவதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக செயற்படுத்துமாறு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.