;
Athirady Tamil News

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருமஞ்சம் வெள்ளோட்டம்!

0

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வியாழக்கிழமை(25) தைப்பூச திருநாளன்று மாலை 6 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற திருமஞ்சத்தில் பவனி வருவார் எனவும் இரண்டு தினங்களிலும் முருகப்பெருமான் அடியவர்கள் வடம் பிடித்து அருளைப் பெறுமாறு ஆதீன கர்த்தா அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.