தெற்கு அதிவேக நெடுஞ்சாலை துப்பாக்கிச்சூடு: அரசியல்வாதி ஒருவர் உயிரிழப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இன்றைய தினம் (22-01-2024) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொஸ்கொட சுஜி தலைமையிலான பாதாள உலக குழுவுக்கும் இவருக்குமிடையில் நீண்டகால நிலவிவரும் பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
குடாவெல்லையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்த சமன் பெரேரா , 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.