ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் 15 குழந்தைகள் பிறந்தன!
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் பதினைந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
அரசு நடத்தும் எம்டிஎச் மருத்துவமனையில் 11 குழந்தைகள் சாதாரண பிரசவத்தின் மூலமும், மூன்று குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் சுமித்ரா யாதவ் தெரிவித்தார்.
இன்று பிறந்த அனைத்து குழந்தைகளும் நன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெபல்பூர் சிவில் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை தினமான நேற்று (ஜனவரி 22) பல கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முயன்றதாக அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.