கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தோட்டாக்கள் மீட்பு
கொழும்பு 8 , பொரளை, சர்பன்டைன் வீதி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் கழிவறைக்கு அருகில் இருந்த குழியிலிருந்து 15 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்களானது T 56 ரக துப்பாக்கி மற்றும் எம் 16 ரக துப்பாக்கிகளின் தோட்டாக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் இணைந்து வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யும் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பொரளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.