உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ் : புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்
2024 ஆம் ஆண்டில் மே மாதத்திற்கு பின்னர் சர்வதேச அளவில் மீண்டும் கொரோனா போல கொடிய வைரஸ் ஒன்று பரவும் என்று அஞ்சப்படுகிறது.
எதிர்காலத்தை கணிப்பதாக கூறும் பலரும், மே மாதம் வரையில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடருக்கும், அதனைத்தொடர்ந்து வைரஸ் பரவுதலுக்கும் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
ஆராய்ச்சியில் வெளிவந்த ஜாம்பி வைரஸ்
இதனால் உலகளாவிய மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கும் வேலையில், கடந்த ஆண்டு ரஷியாவின் உறைபூமி என்று வருணிக்கப்படும் சைபீரியாவில் உறைந்து கிடந்த வைரஸின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது ஜாம்பி வைரஸ் என்றும் அழைக்கப்பட்டது.
சைபீரிய வைரஸ் குறித்து மறைந்த எதிர்கால கணிப்பாளர் பாபா இவாங்கவும் தனது எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
கொரோனவை போல அடுத்த புதிய வைரஸ் மே மாதத்தில் பரவ உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பமயமாதலால் காரணமாக, சைபீரியாவில் உள்ள ஆர்டிக் பகுதியில் உறைந்து கிடக்கும் பனி மலைகள் அனைத்தும் உலக வெப்பமயமாதல் பிரச்சினையினால் உருகி வரும் நிலையில், விரைவில் ஜாம்பி வைரஸ் வெளியாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
தற்போது பூமியின் வெப்பமயமாதல் காரணமாக இந்த புதிய தொற்று உலகத்திற்கு பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.