மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான், பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கை
ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
வான்வழித் தாக்குதல்
பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் குண்டுவீசி தாக்கியதால், இருநாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளால் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், இருநாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திய பின்னர், தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
கூட்டறிக்கை
இருநாடுகளும் ஜனவரி 26ஆம் திகதி திரும்பபெறப்பட்ட தூதர்கள் மீண்டும் திரும்புவார்கள் என கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
குறித்த அறிக்கையில், ‘பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு இடையே தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தூதர்களும் ஜனவரி 26, 2024க்குள் அந்தந்த பதவிகளுக்குத் திரும்பலாம் என்று பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, இரண்டு நாடுகளும் தங்கள் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை சமிக்ஞை செய்கிறது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இருநாடுகளும் பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க, அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.