அம்பானி-நீதா தம்பதி அயோத்தி ராமருக்கு 33 கிலோ எடையில் தங்க-வைர கிரீடங்கள் கொடுத்தார்களா., உண்மை என்ன?
அயோத்தி பால ராமருக்கு ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் பல கோடி ரூபாய் பரிசளித்துள்ளதாக ஊடகங்களில் ஒரு செய்தி உலா வருகிறது.
இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்ட விழா நேற்றுமுன் தினம் நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பல VVIPக்கள், திரையுலக நட்சத்திரங்கள், பிரபல தொழிலதிபர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், சாதுக்கள் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.
மேலும், பல பணக்கார தொழிலதிபர்கள் ஸ்ரீராமருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர்.
அதேபோல் தற்போது முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் 33 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 3 கிரீடங்களை அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை பிரபல ஊடகமொன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விவகாரம் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிய வந்தது.
நீதா உட்பட முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் யாரும் இதுபோன்ற அன்பளிப்பை வழங்கவில்லை என்பதை ராமஜன்மபூமி உறுதி செய்துள்ளது. மேலும், கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த ஆடம்பர விழாவில் நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் முழு குடும்பமும் ஈடுபட்டது, நீதா அம்பானியும் அவரது கணவர் முகேஷ் அம்பானியும் ஒன்றாக வந்தனர். நிதா அம்பானி தனது வழக்கமான பாரம்பரிய உடையான புடவையில் தனது கணவருடன் வந்து கவனத்தை ஈர்த்தார்.
அவர்களின் மகள் இஷா அம்பானி தனது கணவர் கவுதம் பிரமலுடன் வந்தார். ஆகாஷ் அம்பானியும் தனது மனைவி ஷ்லோகா அம்பானியுடன் இந்த மங்கள நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, அம்பானி அடுக்குமாடி குடியிருப்பு ஆன்டிலியா விளக்குகளால் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.