;
Athirady Tamil News

இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனம்: பல கோடிகள் பணத்தை இழந்த பிரித்தானிய மக்கள்

0

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், நம்பி முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களை நம்பவைத்து
குறித்த நபர்கள் பிரபல நாடக கதாபாத்திரங்களின் பெயரில் வாடிக்கையாளர்களை நம்பவைத்து ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. Choice Option என தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் Blue Crest Capital Options என அறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமானது வித்தியாசமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டமானது இலங்கையரான 35 வயது Sujanthan Sotheeswaran தலைமையில் செயல்பட்டுள்ளது. இவருடன் Darren Peck(43), மற்றும் Denis Deegan(49) என்பவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் தற்போது கூறுகையில், அந்த நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டி அளித்ததாகவும் ஆனால் அதன் நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அந்த தொகையை மொத்தமும் தங்களுக்கு சொந்தமாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில், ஜனவரி 19ம் திகதி சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் சுஜந்தன் உட்பட மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது. மேலும் சுஜந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், லண்டன் பகுதியை சேர்ந்த Darren Peck என்பவருக்கு 21 மாதங்கள் தண்டனையும், அத்துடன் பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.

Denis Deegan என்பவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகையை Blue Crest Capital Options நிறுவனம் வேறு விதமாக முதலீடு செய்துள்ளது.

லாபம் பகிர்ந்தளிக்கப்படும்
இதனூடாக முதலீட்டாளர் மற்றும் நிறுவனத்திற்கு லாபத்தை உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது. மட்டுமின்றி, முதலீடு செய்த மக்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த லாபம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிறுவனத்திற்கு வங்கி கணக்கும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 2016ல், வாடிக்கையாளர்கள் தங்கள் ஒன்லைன் கணக்குகளை அணுக முடியவில்லை, நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை மற்றும் அவர்களின் பணத்தை திரும்பப் பெறவும் முடியாமல் போயுள்ளது.

மட்டுமின்றி லண்டன் பொலிசாருக்கு இந்த நிறுவனம் தொடர்பில் 2016 பிப்ரவரி மாதம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த வர்த்தக நிறுவனமானது முறையானதல்ல என்று முதலீட்டாளர்கள் சந்தேகமும் எழுப்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.