உருகும் பனிப்பாறையில் இருந்து வெளிவரும் ஜாம்பி வைரஸ்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பனிக்கட்டிகளில் புதைந்திருந்த மோசமான வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதால் வெளிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சுமார், 48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு கண்டறிந்துள்ளனர்.
பூகோள வெப்பம்
இவை, ஆர்க்டிக் மற்றும் பிற இடங்களில் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் பூகோள வெப்பம் காரணமாக உறைந்த பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக ஜாம்பி வைரஸ்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜாம்பி வைரஸ்கள்
இவ்வாறு ஜாம்பி வைரஸ்கள் வெளிப்படுமானால் அது உண்டாக்கக்கூடிய விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்கள் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.