இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும் பதற்றம்
இந்திய மாலைதீவு விவகாரங்களுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலைதீவுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா உன்னிபப்பாக கவனித்து வருகிறதாக கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை சீனாவின் அதி நவீன ஆராய்ச்சிக் கப்பல், இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கையில் அனுமதி
அதன்படி, குறித்த ஆராய்ச்சிக் கப்பல் பெப்ரவரி முதல் வாரத்தில் மாலைதீவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தில் இந்த ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, கப்பல் மாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைகளை இந்தியா உற்று நோக்கி வருகிறது.
கடும் எதிர்ப்பு
கடற்படை பொதுவாக இத்தகைய சீனக் கப்பல்களை P-8I நீண்ட தூர கடல் ரோந்து விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் கண்காணிப்பதுடன், உயர்நிலை ISR உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு unarmed MQ-9B Sea Guardian droneகளையும் கண்காணிக்கும்.
அத்தோடு, சீனக் கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு அனுமதிப்பதற்கு எதிராக இந்தியா பலமுறை இலங்கைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.