தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்விற்கு முன்மொழிவு
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர் அமைச்சிடம் இருந்து இது தொடர்பான யோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கூடியதுடன், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்றுக்கு அழைக்கப்பட்டது.
3 மில்லியன் ஊழியர்கள்
தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தற்போது தீவிரமாக எழுப்பப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் கூறுகையில், அந்தத் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் தொழிலாளர் அமைச்சின் தலையீடு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து குழு விசாரித்தது.
இது குறித்து தொழிலாளர் அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கையில், “தனியார் துறையில் சம்பளம் பெறும் சுமார் 3 மில்லியன் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு
மேலும் தனியார் துறையின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த தொழிலாளர் அமைச்சு முன்மொழிந்துள்ளது.“
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,700 ரூபாவாக அதிகரிக்க தொழிலாளர் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குழுவிற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.