லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியைப் பறித்த இஸ்ரேல்!
நேற்று சர்வதேச கல்வி தினம். ஒரு சமுதாயத்திற்கு கல்வி எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நினைவுபடுத்துவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு முன்னேற்றமடைந்த, அமைதியான உலகை உருவாக்க கல்வி அவசியம் என்பதை இந்நாள் நினைவு கூறுகிறது.
காஸாவின் கல்வியைப் பறித்தது யார்? மாணவர்கள் என்ன ஆனார்கள்?
இஸ்ரேல், இந்தப் போரின் மூலம் 6,25,000 மாணவர்களின் கல்வியைப் பறித்துள்ளது. மத்திய காஸா மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் 4,551க்கும் அதிகமான மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 8,193 மாணவர்கள் காயப்பட்டிருப்பதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
90 சதவீத அரசு பள்ளிக்கூடங்களை இஸ்ரேல் அழித்துள்ளது. இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்கள் காஸாவை மயானமாக்கி வருகிறது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான சண்டையில் பல அப்பாவி மக்கள் பலியாகிவருகின்றனர்.
போருக்குப்பின் இந்த மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடம்தான். மீண்டும் அமைதி நிலவி வீடுகளும், கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளும் கட்டப்பட்டு சகஜ நிலைக்குத் திரும்புவது எளிதான காரியமல்ல. ஒரு தலைமுறையின் வளர்ச்சியையே இஸ்ரேல் அடியோடு அழித்திருப்பது, இந்த நாளில் நினைவு கூறப்படவேண்டிய ஒன்று