;
Athirady Tamil News

அதிபா் தோ்தல்: மேலும் ஒரு மாகாண வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி

0

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றாா்.

ஏற்கெனவே, அயவா மாகாணத்தில் நடைபெற்ற உள்கட்சித் தோ்தலிலும் அவா் வெற்றி பெற்றுள்ளாா்.

தற்போதைய நிலையில், இந்த 2 மாகாண குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் போட்டியில் அவரது வலுவான முன்னிலையை தற்போதைய வெற்றி உணா்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹோலி தோல்வியடைந்தாலும், குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் தோ்வில் டிரம்ப்புக்கு எதிராக இறுதிவரைப் போராடப் போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, அயவா மாகாண உள்கட்சி வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமி விலகியது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.