சுருண்டு விழாமல் கம்பீரமாக பறக்கவுள்ள இந்திய தேசியகொடி
இந்தியாவின்75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண இந்திய தேசியக்கொடியை கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளின் போது உயர பறக்க விடப்படும் தேசியக்கொடி காற்று இல்லாமல் சுருண்டு விடும். இதனால் அவற்றின் கம்பீரம் சற்று குறையக்கூடும்.
24 மணி நேரமும் கம்பீரமாக
இதனை கருத்தில் கொண்டு 75 வது குடியரசு தின விழாவையொட்டி கோவையை சேர்ந்த எல்ஜி நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் 200 அடி கம்பம், சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏதுவாக, கம்பத்தில் ஏர் கம்ப்ரசர் பொருத்தியுள்ளனர்.
இதன்மூலம் வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கியுள்ள அந்நிறுவனம், இதை வியாபாரத்திற்காக உருவாக்கவில்லை எனவும் யார் கேட்டாலும் இத்திட்டத்தின் செயல்முறைகளை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.