இறக்க போகின்றோம் என தெரியாது செல்ஃபி எடுத்த சனத் நிக்ஷாந்த! வைரலாகும் புகைப்படம்
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (25) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இவ்வாறான விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
கடைசி செல்ஃபி
நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.
இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கண்டெய்னர் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் பரவி வருகின்றது,