தேவாலயத்திற்கு சீல்வைத்து பூட்டு; காரணம் என்ன!
கண்டி, அலவத்துகொடை சமன் தேவாலயத்தை சீல் வைக்க பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயக அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவாலயத்தின் பிரதான பூசாரி இறந்து விட்டார். இந்நிலையில் தேவாலயத்தை நடத்திச் செல்ல ஏனைய நபர்களுக்கு தேவாலயத்தின் சாவியை பிரதான பூசாரியின் சகோதரர்கள் வழங்க விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் இது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் கவலை
இதன் காரணமாக தேவாலயத்தை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பூசாரியின் சகோதரர்கள் தமது உறவினரிடம் தேவாலயத்தின் சாவியை கையளிக்க தயாராக உள்ள போதிலும், பௌத்த மத மரபு படி அவ்வாறு கையளிக்க முடியாது என பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயக அலுவலகம் எடுத்துரைத்துள்ளது.
இந்நிலையில் இன்று (25) நடைபெறவுள்ள நெற்புதிர் திருவிழாவை முன்னிட்டு குறித்த தேவாலயத்தினை திறக்காவிட்டால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படும் என பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன்போது பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தினால் சமன் தேவாலயத்தை திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.