;
Athirady Tamil News

துரத்திய விதி… இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!

0

புத்தளத்தில் சில காலத்துக்கு முன்பு சியான் என்பவர் குடிநீர் விநியோகம் செய்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சொகுசு வாகனமொன்று அவரை நடுவீதியில் மோதிவிட்டு தப்பிப் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த சியான் என்பவர் ஆபத்தான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, சியானை மோதி விட்டு சென்ற சொகுசு வாகனத்தை அன்றைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தி வந்ததாக கண் கண்ட சாட்சிகள் பலரும் இருந்தார்கள்.

எனினும் பொலிஸாரின் தகவலறிக்கையில் வேறொரு நபர் வாகனத்தைச் செலுத்தி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகாரத்தின் துணை கொண்டு சனத் நிஷாந்த தப்பித்துக் கொண்டார். அதன் பின் சியான் மிக ஆபத்தான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் இருந்து குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்திற்கு எதுவித நியாயமும் கிடைக்கவில்லை. வெறும் 10000 ரூபாவுடன் அனைத்தும் முடிந்தே போனது.

சியானின் குடும்பம் நடுத்தெருவில் விடப்பட்டார்கள். இன்று வரைக்கும் அவர்கள் கஷ்ட ஜீவனம்தான். நேற்று  அதிகாலை வாகன விபத்தொன்றில் சனத் நிஷாந்தவும் உயிரிழ்ந்துள்ளார்.

இதே வாகனம் தான் சியான் மீதும் மோதி அவரை உயிரிழக்கச் செய்திருந்தது. சியான் மீது மோதிய அதே பக்கம் தான் இன்றும் கொள்கலன் மற்றும் அதிவேகப் பாதையின் பாதுகாப்பு வேலியில் மோதி சுக்கு நூறாகிக் கிடக்கின்றது.

ஆனாலும் யாராக இருந்தாலும்.. ஒரு மனிதரின் உயிரிழப்பு கவலைக்குரிய விடயமே.. அந்த வகையில் சனத் நிஷாந்தவின் மரணத்தை கொண்டாடும் மனோ நிலையில் நான் இல்லை என குறித்த பதிவை முகநூலில் அக்கரைப்பற்றுவை சேர்ந்த Ranees Akp பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.