சிங்க குட்டியுடன் காரில் தாய்லாந்து தெருக்களை சுற்றிய நபர்கள்: இலங்கையர் உட்பட 3 மீது பாய்ந்த வழக்கு
தாய்லாந்தில் சிங்க குட்டி ஒன்றை காரில் போட்டு சுற்றிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிங்க குட்டி உடன் வலம் வந்த நபர்கள்
தாய்லாந்து நாட்டில் சிங்க குட்டி ஒன்றுடன் பென்ட்லி (Bentley) காரில் வலம் வந்த 3 நபர்களின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் மீது சட்டவிரோதமாக வன விலங்கை வைத்து இருந்தற்கான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் வைரலான வீடியோவில் 9 மாத சிங்க குட்டி ஒன்று கழுத்து பட்டையுடன் வெள்ளை நிற பென்ட்லி காரின் நுனியில் அமர்ந்து கொண்டு பட்டாயாவின் தெருக்களை சுற்றி வருவதை பார்க்க முடிகிறது
Viral video of the day:
A person – probably from Bangladesh – chauffeurs a four-month-old lion through the middle of Pattaya in a rented Bentley convertible.
How sick is this?
Keeping a lion as a pet is cruel!Vid. cr.: Pierre-Alexandre / T-Tok
8 December 2023#Pattaya https://t.co/ctPbOI9CDD pic.twitter.com/8bzsA0hOiF— ฿คຖgk๐k-฿๐y – หนุ่มบางกอก (@Bangkokboy17) January 23, 2024
ஜனவரி 24ம் திகதி இந்த வீடியோ டிக் டாக்கில் பதிவிடப்பட்ட நிலையில், 40,000க்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த வீடியோ ஈர்த்துள்ளது.
வழக்கு பதிவு
இந்நிலையில் காவல்துறை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கினர்.
அதன்படி, சிங்கத்தின் உரிமையாளராக பதிவு செய்து கொண்டுள்ள தாய்லாந்துப் பெண் சவாங்ஜித் கொசுங்னியோன் மற்றும் விலங்கு பாதுகாவலரான உக்ரைனைச் சேர்ந்த அபினா குருட்ஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற 53 வயது இலங்கையர் ஒருவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றத்திற்கு பொதுவாக ஒராண்டு சிறை தண்டனை அல்லது 2,000 பவுண்டுகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.