அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாள் நன்கொடை இத்தனை கோடிகளா…!
அயோத்தி ஸ்ரீபால ராமர் கோயிலின் முதல் நான் நன்கொடையாக இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22ம் திகதி பெரும் எதிர்பார்பிற்கு மத்தியில் ஸ்ரீபால ராமரின் சிலை அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதற்கு அடுத்த நாளிலிருந்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பக்தர்களிடம் நன்கொடை
மேலும், கோயிலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கோயில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களிடம் நன்கொடை கோரப்பட்டிருந்தது.
நன்கொடைகள் தொடர்பில் அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா தெரிவிக்கையில்,
சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாளில், நிகழ்நிலை மூலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரூ.3.17 கோடி அளவுக்கு நன்கொடை குவிந்துள்ளது.
பொதுமக்கள் அனுமதி
கோயிலில் 10 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடப்பட்டிருக்கும் ரொக்கப் பணம், காசோலை, வரைவோலைகள் இன்னமும் எண்ணப்படவில்லை.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து, கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு இந்தத் தொகை வந்துள்ளதாக அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கோயில் வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னமும் ரொக்கப் பணம் எண்ணப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வந்த நன்கொடைகளின் அளவும் எண்ணப்படவில்லை. என தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் நன்கொடை
பொதுமக்கள் அனுமதிக்கு பின்னர், கடந்த 23 ஆம்ட திகதி 2.5 லட்சம் பேருக்கு மேற்பட்டோரும், 24 ஆம் திகதி சுமார் 5 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என்று கோயில் நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், பக்தர்களிடமிருந்தும், பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் ஏராளமான பரிசுபொருள்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளது.
மேலும், அயோத்தியில் ராமர் கோயிலானது முழுவதுமாக பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டதுடன் இந்திய செல்வந்தர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 2.51 கோடி நன்கொடையாக ராமர் கோயிலுக்கு அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.