கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஒரு கோடி 37 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய இவர், வழமையாக விமானங்களில் செல்லும் வர்த்தகப் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்க நகைகள்
இந்த பெண் இன்று அதிகாலை 12.40 மணியளவில் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு Fly Dubai Airlines இன் FZ-569 விமானத்தில் வந்துள்ளார்.
அவர் தனது பயணப் பொதிக்குள் கவனமாக மறைத்து வைத்திருந்த 666 கிராம் நகைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது