ஹூதிக்கள் தாக்குதல்: 42% சரிந்த சூயஸ் கால்வாய் போக்குவரத்து
காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சூயல் கால்வாயில் வா்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் சரிந்துவிட்டதாக ஐ.நா.வின் வா்த்தகப் பிரிவான யுஎன்சிடிஏடி கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜான் ஹாஃப்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சா்வதேச அரசியல் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் இதுபோல் கடல் வணிகம் பாதிக்கப்படுவதால், உணவுப் பொருள்களின் வலைகள் உலக அளவில் உயா்வதற்கான அபாயம் உள்ளது’ என்று எச்சரித்தாா்.