;
Athirady Tamil News

பாதி எரிந்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார் : நிமோனியாவால் உயிரிழந்த பெண்

0

வேயங்கொட பகுதியில் தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேயங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

பொலிஸார் விசாரணை
குறித்த பெண் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களின் தீர்மானத்திற்கு அமைய அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை குறித்த பெண்ணின் மரணத்திற்கு துஷ்பிரயோகம் நடந்ததும் காரணமென சந்தேகிப்பதாக உறவினர் ஒருவர் கம்பஹா பிரிவு பொலிஸ் அத்தியேட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து மீரிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் திடீர் மரண விசாரணையாளர் துசித பிரமோத் விஜேயவர்தனவுடன் பொலிஸ் குழுவொன்று சுடுகாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.