63 வயதில் முதல் திருமணநாளை கொண்டாட வெளிநாடு சென்ற பிரித்தானியர்..உணவால் நேர்ந்த பாதிப்பு
துனிசியாவில் சாப்பிட்ட உணவால் நோய்வாய்ப்பட்ட பிரித்தானிய தம்பதி, உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரித்தானிய தம்பதி
பிரித்தானியாவின் பர்மிங்காமைச் சேர்ந்த தம்பதி சில்வியா ஜாக்கர் (64), டேவிட் ஹர்ல்ஸ்டன் (63). இந்த தம்பதி தங்கள் முதல் திருமணநாளை கொண்டாட துனிசியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். கடந்த 17ஆம் திகதி அவர்கள் சாப்பிட்ட உணவினால் கடும் வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாகினர்.
குறிப்பாக, சில்வியா இதய நோயாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் கடும் அவதிக்குள்ளானார்.
ரிசார்ட் மீது வழக்கு
இதனைத் தொடர்ந்து, தம்பதியர் பிரித்தானியாவுக்கு திரும்பி மருத்துவ உதவியை நாடினர். மேலும் அவர்கள் தங்கள் இரத்த பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
மேலும், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனை குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளனர். அதாவது, அவர்கள் தங்கியிருந்த நான்கு நட்சத்திர துனிசிய ரிசார்ட் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.