கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா
சோமாலிய கடற்கொள்ளையா்களால் மீன்படி கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கையின் கடற்படை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலை நேற்றைய தினம்(28) கடற்படை செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி ஹலவத்த, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலையும், 06 கடற்றொழிலாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தல்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஐ.நா.வின் மத்திய கடற்பாதுகாப்புப் படையிடம் கடந்த சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது.