இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்: ஹரின் அதிரடி
தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க, கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கான இடைக்கால சபையை நியமித்திருந்தார்.
இடைக்கால கட்டுப்பாட்டுச் சபை
அத்துடன், இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கட்டுப்பாட்டுச் சபையொன்றை நியமிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த இரண்டு இடைக்கால கட்டுப்பாட்டு சபைகளையும் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நேற்று(28.01.2024) வெளியிட்டுள்ளார்.
கராத்தே தோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பணிகளை கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் ஹரின் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.